“ஒரு சமூகம் தனது குழந்தைகளை எவ்வாறு வழி நடத்துகிறார்கள் என்பதை விட அடிப்படை சோதனை எதுவும் இல்லை.”

written by Nooriya Jamaldeen

குழந்தைகள் மீதான சிறுவர் துஷ்பிரயோகத்தின் தாக்கங்கள்

“பாதுகாப்பு என்பது வெறும் சாதாரண நிகழ்வு அன்று மாறாக அனைவரிம் ஒரு மித்த மற்றும் பொது மூலதனத்தின் விளைவாக கிடைப்பதாகும். நம் சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலை குடிமக்களாக உள்ள குழந்தைகளுக்கு வன்முறை மற்றும் அச்சமில்லாத வாழ்க்கையை உறுதி செய்ய நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கின்றோம்.”

(நெல்சன் மண்டேலா)

இரண்டாம் உலகப்போரையே எதிர்த்து வெற்றி கொண்ட இவ் உலகமே அஞ்சி நடுங்கும் அளவு பாரிய சவாலாக இன்று சிறுவர் துஷ்பிரயோகம் காணப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் சர்வதேச சிறுவர் தினம் ஒக்டோபர் 1ம் திகதி கொண்டாடப்பட்டாலும் உலகையே அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகத்தை பற்றி கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம் ஆகும்.

சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் பெற்றோர் அல்லது பராமரிப்பாளரால் அவர்களின் செய்கை மூலம் அல்லது சரியான வழியில் நடக்க தவறுவதன் மூலம் காயம் ,மரணம் ,உளவியல் பாதிப்பு அல்லது பாரதூரமான பாதிப்பிற்கான ஆபத்தை சிறுவர்களுக்கு ஏற்படுத்தலாகும். உடலியல் ரீதியான துஷ்பிரயோகம் ,பாலியல் ரீதியான துஷ்பிரயோகம், உளவியல் மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம், புறக்கணிப்பு என்பன சிறுவர் துஷ்பிரயோகத்தின் வகைகளாகும். வழக்கமாக இவ்வகைகள் தனியாக ஏற்படுவதை விட பல வகையான துஷ்பிரயோகங்களின் கலவையாக நிகழ வாய்ப்புள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில், அதிலும் பாலியல் துஷ்பிரயோகங்கள் மிக அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன . தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி( National Crime Records Bureau- NCRB ) 2016 ஆம் ஆண்டில் பதிவான குழந்தைகள் மீதான பாலியல் பலாத்கார வன்முறை நிகழ்வுகள் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 82 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு குழந்தைகள் உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பாதிப்புக்கள் ஆளுமை வளர்ச்சி, கல்வி, பணி ,உறவுகள் என அனைத்து நிலைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு நீங்காத வடுவாக வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. சிறுவர் துஷ்பிரயோகத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக இந்திய அரசு 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஒரு குழுவால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள் அதே காரணத்திற்கு அல்லது சந்தர்ப்பத்திற்காக மற்றொரு குழுவால் துஷ்பிரயோகம் செய்யப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியில் குறிப்பிடப்படுகிறது.WHO 2005).

உடலியல் ரீதியான துஷ்பிரயோகம் என்பது ஒரு குழந்தை மீது பெற்றோர் அல்லது பராமரிப்பாளரால் வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ ஏற்படுத்தும் எந்த ஒரு உடற் காயத்தையும் உள்ளடக்கியதாகும். இது சிறுவர் துஷ்பிரயோகத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். .ஒரு குழந்தையை அடித்தல், பட்டினி போடுதல், சங்கிலியால் கட்டுதல், உதைத்தல், கடித்தல், முடியை இழுத்தல், அடைத்தல், வீசுதல், கசையடிகள் போன்ற குழந்தையை காயப்படுத்தும் எந்த ஒரு செயலும் உடல் ரீதியான துஷ்பிரயோகமாகும். இத்தகைய துஷ்பிரயோகங்கள் பாடசாலையிலும் ,வீட்டிலும் அல்லது அனாதை இல்லங்களிலும் நிகழ வாய்ப்புள்ளது. உடல் ரீதியான துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள் பலவிதமான பாதகமான நிலைமைகளுக்கு ஆளாகின்றனர். இவற்றுள் மிக முக்கியமானது உடனடியான உடற் விளைவுகளை தோற்றுவிக்கும். உடல் ரீதியாக இது சிராய்ப்புகள், எலும்பு முறிவுகள், கீறல்கள் போன்ற அறிகுறிகளை காட்டுகிறது. உடல் வளர்ச்சி, நடத்தைப் பிரச்சினைகள் மற்றும் பலவீனங்கள், உடலின் வெளிப்புற மற்றும் உட்புற உறுப்புக்களுக்கு சேதம், எலும்பு முறிவுகள் மற்றும் இரத்தப் போக்கு போன்ற சிக்கல்களுக்கும் குழந்தைகள் ஆளாகின்றன. ஆளுமை குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் கூச்ச சுபாவமுள்ள சமூகத்தை வெறுக்கும் பின்தங்கிய குழந்தைகள் பிறப்பது உடல் ரீதியான துஷ்பியோகத்தின் விளைவாகும்.

ஒரு குழந்தைக்கு உடல் ரீதியான துஷ்பிரயோகம் அல்லாமல் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமும் செய்யப்படலாம். கடுமையான சொற்களின் பயன்பாடு, மிரட்டல்,அச்சுறுத்தல்கள், தனிமைப்படுத்துதல், நிராகரித்தல் என்பன இவ்வகை துஷ்பிரயோாகத்தில் அடங்கும். இந் நிலைமைகளை கண்டறிவது மிகவும் கடினம். உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகத்தின் தாக்கம் பெரும்பாலும் உடல் ரீதியான துஷ்பிரயோகத்தை விட ஆழமானதாகவும் நீடித்ததாகவும் இருக்கும்.

சிறுவர் துஷ்பிரயோக வகைகளில் பாலியல் துஷ்பிரயோகமானது ஒரு கடுமையான பிரச்சினையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகில் ஒவ்வொரு நாட்டிலும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமானது ஒரு குற்றமாக வரையறுக்கப்படுகிறது. ஆனால் இப்போதெல்லாம் நவீன சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் பல்வேறு வடிவங்களில் பரவலாக இருப்பதால் பாலியல் துஷ்பிரயோகம் மிகவும் சிக்கலானதாக மாறி வருகிறது. சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்தல், விபச்சாரம், அநாகரிகமான வெளிப்பாடு, இயற்கைக்கு மாறான குற்றம் மற்றும் ஆபாச வெளியீடுகள் போன்ற தவறுகளை குறிப்பிட்டுள்ளனர். துஷ்பிரயோகம் செய்யப்படுபவருக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு குறித்து கேட்டால், துஷ்பிரயோகம் செய்வது குழந்தைகளுக்கு தெரிந்த நபர் என்று தெளிவாகிறது. பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானாலும், உலக சுகாதார அமைப்பின் படி (WHO) அதிகமான சதவீதமான (சுமார் 36%) உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் என அறிவிக்கப்படுகிறது. குழந்தைகளை பாலியல் தொழிலாளர்களாக பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளுக்கு பாலியல் மூலம் பரவும் நோய்கள் இருப்பதாக தாகவல்கள் உள்ளன. கூடுதலாக அசாதாரண பாலியல் நடத்தை மூலம் கருவுறாமை மற்றும் ஆண்மைக் குறைவு ஆகிய பிற பாதகமான விளைவுகளும் உருவாகும். சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் போது பலர் பெண்கள் மீது கவனம் செலுத்தினார், என்றாலும் இன்று சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு மிகவும் பொதுவாகக் கருதப்படுகின்றன. இலங்கையில் தெற்கு கடற்கரை பகுதியில் நடாத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி ,காமவெறி கொண்ட சுற்றுலா பயணிகளால் பாதிக்கப்பட்டு 70 சதவீதமான சிறுவர்கள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர்.

துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை புறக்கணிப்பதன் மூலம் முக்கியமான பாதகமான விளைவாக அக்குழந்தையின் கல்வி முறியடிக்கப்படுகிறது. பாடசாலைக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தாலும் கல்வியில் வெற்றி அடைவது கடினம். பெற்றோரின் அன்பின்றி வளரும் குழந்தைகள் குறிப்பாக பிற பராமரிப்பாளர்களின் கீழ் வளரும் குழந்தைகளே இத்தகைய துஷ்பிரயோகங்களுக்கு இலகுவில் ஆளாகி புறக்கணிக்கப்புக்கு உள்ளாகின்றனர். இலங்கையில் 3 சதவீதமான குழந்தைகள் பெற்றோரின் பாசத்தை இழந்து அனாதை இல்லங்களில் சிக்கியுள்ளனர். வீடற்ற தெரு குழந்தைகளின் அவல நிலையைக் குறிப்பிட தேவையில்லை. அவ்வகை குழந்தைகள் விபச்சாரம் மற்றும் போதை பொருளுக்கு அடிமையாகின்றன. போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் பல்வேறு சமூக தவறான எண்ணங்களில் ஈடுபடுபவர்கள் இந்த சமூகத்தினால் புறக்கணிக்கப்படுகின்றன. மேலும் மருத்துவம் சார்ந்த சிகிச்சைகளை புறக்கணித்தல், குழந்தைகளை தனிமைப்படுத்தல், பாடசாலைக்குச் சேர்க்காது இருந்தல், சிறப்புக் கல்வியை ஒதுக்கி வைத்தல், ஆரோக்கியமான உணவு ,பானம் மற்றும் ஆடைகளை வழங்கத் தவறுதல் போன்ற புறக்கணிப்புகளுக்கும் குழந்தைகள் ஆளாகின்றன. மேலும் குழந்தைகளை புறக்கணிப்பதால் தற்கொலைகள், கருகளைப்பு மற்றும் குழந்தை திருமணங்களுக்கும் வழிவகுக்கின்றன.

போரின் போது வடக்கில் சிறுவர் படையினராக அப்பாவி குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் போது குழந்தைகளின் மனதில் வெறுக்கத்தக்க எண்ணங்களை தூண்டுவதன் மூலம் எதிரிகளின் மனதில் குழந்தைகளை உளரீதியாக துஷ்பிரயோகம் செய்வது வழக்கமாகும். ஆயுதங்கள் இல்லாமல் விடுதலைக்காக போராடுவது துரதிஷ்டவசமான சூழ்நிலை யாரும். இரண்டாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வந்த உலகில் குழந்தையின் உரிமை, சுதந்திரம் பாதுகாக்கப்படுவது இல்லை என்பது ஒரு கவலைக்குரிய விடயமாகும். மூடிய கதவுகளுக்குப் பின்னால் துஷ்பிரயோகம் செய்யப் படலாம். ஆனால் அவை ஒருபோதும் கம்பத்தின் கீழ் அடித்துச் செல்லக்கூடாது. இந்த விடயத்தில் நாம் தொடர்ந்து அமைதியாக இருந்தால் மனிதர்களாகிய நாம் துஷ்பிரயோகத்தை தடுக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை எனில் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதில்ல் ஆச்சர்யம் இல்லை. இவ்வன்முறையை தடுக்க நாம் அனைவரும் கைகோர்த்து ஒன்றாக செயற்படுவோம்.

சான்றாதாரம்

  • VISTAS online- American Counselling Association-Article 19 by Melissa Hall and Joshua Hall
  • The National Academic Press; Understanding child abuse and neglect(1993)
  • Children Welfare information Gateway; Long term consequences of child abuse and neglect: factsheet April 2019
  • Impact of child abuse education on Parent’s self-efficacy; An experimental study by Sabina Balkaran (2015)
  • WHO; Fact sheet: Child maltreatment

Leave a Comment

Your email address will not be published.